யோஷிதவின் பாட்டிற்கு நீதிமன்ற அழைப்பாணை.

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெசி பொரஸ்ட (82) இனை எதிர்வரும் 31ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஓகஸ்டா அதபத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கல்கிஸ்சை இடம் குறித்து வாக்குமூலம் அளிக்கவே FCID இற்கு வருமாறே இவ்வாறு நோத்தீஸ் (அறிவித்தல்) விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (26) சட்டத்தரணியுடன் சமூகமளித்திருந்த டெசி, நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார். அவரது சட்டத்தரணி கூறுகையில் தனது தரப்பினரது உடல்நிலை காரணமாக ஓகஸ்ட்  31ம் திகதி நீதிமன்ற முன்னிலையில் ஆஜராக முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.