யோஷித்தவின் பாட்டியும் எப்.சி.ஐ.டியில்!

ன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குறித்து நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் அவரது பாட்டியிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தெஹிவளை மற்றும் கல்கிஸ்சை பகுதிகளில் இருக்கும் யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா பெறுமதியான காணிகள் குறித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த காணிகள் யோஷித்தவின் பாட்டியின் பெயரிலேயே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே, டெய்சி என்ற யோஷித்தவின் பாட்டி இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.