யோஷித மனைவியுடன் சுவர் ஓவியம் வரைய யாழ். விஜயம் – பெளத்த ஓவியங்களுக்கு எதிர்ப்பு [PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –யாழ்ப்பாண சிறைச்சாலையின் சுவரில் பெளத்த கருத்துக்கள் மற்றும் சிலைகள் அமைப்பதற்கு எதிராக கடந்த சனிக்கிழமை பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து குறித்த சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், சிங்கள பெளத்த மதத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை உருவாக்கி வடக்கில் இனவாதத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்க வேண்டாம். ஓவியங்கள் வரைதலில் ஈடுபடும் நபர்களுக்கு மீண்டும் இனவெறியை உருவாக்காத வகையில் ஒரு பாணியை உருவாக்க முறைப்படி அறிவுறுத்தப்பட வழங்கப்பட வேண்டும். என அக் கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யோஷித தனது மனைவியுடன் சுவர் ஓவியம் வரைவதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தில் ​​யாழ்ப்பாணத்தில் உள்ள மதத் தலைவர்களைச் சந்தித்து யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து விசாரித்துள்ளார்.