யோஷித மற்றும் ஷிரந்தி இன்று, நாளை சி.ஐ.டி முன்னிலையில்..

றகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோரை முறையே இன்று(14) மற்றும் நாளை(15) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வஸீம் கொலை தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இதற்கு முன்னரும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் சமூகமளித்திருக்கவில்லை.

அவசர நோய் நிலைமை காரணமாக சமூகமளிக்க முடியவில்லை எனத் தெரிவித்து பிறிதோர் திகதியினை வழங்குமாறு இவர்கள் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)