Raqqa is Being Slaughtered Silently எனும் சுயாதீன ஊடக அமைப்பின் முக்கிய ஊடகவியலாளரான அஹமட் மொஹமட் யல் மௌஷா, என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்த நிலையில், வந்த குழு சிரியாவின் இட்லிப் (Idlib) பகுதியில் வைத்து அவரை படுகொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மௌஷாசின் கொலை தொடர்பில் குறித்த குழு ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ள போதிலும், மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
சிரயாவில் இயங்கும் Raqqa is Being Slaughtered Silently என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றிய இரண்டு ஊடகவியலாளர்கள் கடந்த மே மாதம் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பான (CPJ) கௌரவிக்கப்பட்டனர்.
எனினும் அவர்கள் இருவரும் பின்னர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.