வரையறுக்கப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
அதற்கான அங்கீகாரம் இன்று(07) வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்தின் நிலப்பாதுகாப்பு நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு பிரிவுக்கும், கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடற்படையினருக்கும் பகிருமாறும் அந்த யோசனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.