ரங்கன ஹேரத்தினது தலைமைப் பதவி குறித்து மஹேலவிடமிருந்து ‘நச்’ன்னு பதில்..

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே தற்போது செரட்டி வால்க் என்ற சார்பில் நிதி திரட்டுவதற்காக இலங்கையில் சில பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தினை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இலங்கை அணி ஜிம்பாவேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதற்கான முதல் டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1.1

இது குறித்து இலங்கை ரசிகர் ஒருவர் ஜெயவர்த்தனேவிடம் இலங்கை அணியில் தற்போது டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹெராத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று டுவிட் போட்டுள்ளார்.

1

இதற்கு பதில் அளித்த ஜெயவர்த்தனே , சிறப்பான வேலையை செய்ய அவர் தயராக இருக்கிறார். இதில் சில ஏற்றங்கள், இறக்கங்கள் காண நேரிடும் என சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார்.