ரங்கன ஹேரத்தின் இடத்தை பூர்த்தி செய்யும் லசித்

(FASTNEWS|COLOMBO) – தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய, குறித்த தொடரில் உபாதைக்கு முகங்கொடுத்து ஐந்து மாதங்கள் உபாதையிலிருந்த இவர், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றார்.

உபாதைக்கு பின்னர் டெஸ்ட் அணிக்கு திரும்பியதுடன், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்

அனுபவ வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் வழங்கிய ஆலோசனைகள் பந்துவீசுவதற்கு இலகுவாக அமைந்ததாக லசித் எம்புல்தெனிய குறிப்பிட்டார்.

உபாதைக்கு பின்னர் முதல் போட்டியில் விளையாடியதால், முதல் இன்னிங்ஸில் சற்று தடுமாற்றம் அடைந்தேன். அதனால், ஒரே மாதிரியான பந்துகளை வீசுவதற்கு முடியவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எனது பந்துவீச்சில் ஏதாவது சந்தேகம் இருந்தால் நான் உடனடியாக அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்வேன். எந்த நேரத்திலும் அவரிடன் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரங்கன ஹேரத்தின் ஓய்வின் பின்னர், அவரின் இடத்தை லசித் எம்புல்தெனிய பூர்த்திசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.