ரங்கன ஹேரத் தனது அடுத்த இலக்கினை அம்பலப்படுத்தினார்…

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுக்களை வீழ்த்துவதே தனது அடுத்த இலக்கு என்று இலங்கை அணியின் நட்சத்திர இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 366 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள ரங்கன ஹேரத் நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னர் நியூஸிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி 113 டெஸ்ட் போட்டிகளில் 362 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இதுதான் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் எடுத்த அதிக விக்கெட்டுக்களாக இருந்தன.

இந்நிலையில் பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் ஹேரத் 366 விக்கெட்டுக்கள் வீழ்த்தி வெட்டோரியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த சாதனை குறித்து ஹேரத் கருத்துக் கூறுகையில்;

“…இது ஒரு மிகப் பெரிய சாதனை என்றே கூறுவேன். ஆனால் இந்த விக்கெட்டுக்களை வீழ்த்த எனக்கு ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நான் கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும். இத்தோடு நின்று விடாது இடது கை பந்து வீச்சாளராக 400 விக்கெட்டுக்களை வீழ்த்துவதே எனது அடுத்த இலக்கு….” என்றும் தெரிவித்தார்.

 

(rizmira)