ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இர்பான் பதான்

ரியாலிட்டி நடன போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் மேடையில் அனல் பறக்க நடனம் ஆடி பார்வையாளர்களை பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சியான ‘கலர்ஸ்’ நடத்தும் ரியாலிட்டி நடன ஷோ ‘ஜலக் திக்லா ஜா ரீலோடட்’-இல் இந்திய கிரிக்கெட் விளையாட்டின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இந்நிகழ்ச்சியின் முதல் பாகம் கடந்த ஞாயிறு அன்று ஒளிப்பரப்பட்டது. அதில் பிரபு தேவா இயக்கிய ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் இடம் பெற்ற சிண்டா தா தா என்று பாடலுக்கு இர்பான் நடனம் ஆடினார்.

இந்த புதிய முயற்சி பற்றி இர்பான் கூறுகையில்; இந்நிகழ்ச்சி நடனம் ஆட தெரியாதவர் நடனம் ஆடுவது பற்றியது. இது நிச்சயமாக புதிய அனுபவமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியின் நடுவர்களாக பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், இயக்குனர் கரன் ஜோஹர், நடன கலைஞர் லாரன் காட்லீய்ப் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஹெக்டே ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இர்பான் தனது சகோதரர் யூசுப் பதானுடன் இணைந்து பின்தங்கிய குழந்தைகளுக்காக சொந்த செலவில் கிரிக்கெட் அகாடமியைத் துவங்கினார். இந்த ரியால்டி ஷோவில் கிடைக்கும் பணத்தை தனது கிரிக்கெட் அகாடமிக்கு செலவு செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)