சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி வரலாற்றுத் தோல்வி கண்டது.
தொடர் தோல்வியை அடுத்து இலங்கை ரசிகர்களும், ஊடகங்களும் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில், இது குறித்து இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கா கூறுகையில்ர;
“..ரசிகர்கள் எங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இலங்கை அணி தற்போது எந்நிலையில் இருந்தாலும், ரசிகர்கள் 200 சதவீத ஆதரவை இலங்கை அணிக்கு தருவார்கள் என நம்புவதாகவும், அணித்தலைவராக இதை ரசிகர்களிடம் எதிர்பார்க்கின்றேன்..” என கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாக தலைவர் திலங்க சுமதிபால கூறுகையில்;
“..டெஸ்ட் தொடர் இப்படி அமையும் என எதிர்ப்பார்க்கவில்லை. இந்த தோல்வி எங்களை ஏமாற்றமடைய செய்துள்ளது, அடுத்து விளையாடவுள்ள 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை நேர்மறை எண்ணத்துடன் அணுகவுள்ளோம்..” என கூறியுள்ளார்.