ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கல்வி நடவடிக்கைகள் இன்று(26) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மருத்துவ பீட விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மருத்துவ பீட பேராசியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதன் காரணமாக இன்று முதல் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.