ரஜரட்ட பல்கலைக்கழகமானது தற்காலிகமாக மூடப்பட்டது…

ரஜரட்ட பல்கலைக்கழகத்தை, எதிர்வரும் செம்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மூட, பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று(28) நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பல்கலைக்கழக மாணவர்களிடையே அம்மை நோய் பரவி வந்ததன் காரணமாக, கடந்த ஓகஸ்ட் மாதம் 10 திகதி, பல்கலைக்கழகம் மூடப்பட்டு கடந்த 27 திறக்கப்படவிருந்தது, எனினும் தற்போது அநுராதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் வரட்சியின் காரணமாக, மாணவர்களுக்கு தேவையான நீரை வழங்க முடியாதுள்ளமையால், பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களையும் மூட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.