“ரஜரட்ட ருஜின” 50ம் வருட நிறைவினை முன்னிட்டு விசேட ரயில் சேவை…

“ரஜரட்ட ருஜின” புகையிரத்திற்கு எதிர்வரும் 26ம் திகதிக்கு 50 வருடம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கென விசேட ரயில் சேவை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது மேலாளர் விஜய சமரசிங்க அரச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வவுனியா புகையிரத நிலையம் வரையில் குறித்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகையிரதம் 1968.02.26 ஆம் திகதி சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma