தளபதி விஜய் நடிப்பில் இன்று(18) உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் மெர்சல் படத்தை பார்க்க இலட்சகணக்கான ரசிகர்கள் காத்திருக்க, அவர்களுக்கு விருந்தாக படம் வெளிவந்துள்ளது.
இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது, ஏனெனில், ஏற்கனவே விஜய்-அட்லீ கூட்டணியில் வெளிவந்த தெறி செம்ம ஹிட் அடித்தது.
இந்நிலையில் மெர்சல் ப்ரீமியர் நேற்று அமெரிக்காவில் தொடங்க, இப்படம் 273K டாலர் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு பிறகு அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்தது மெர்சல் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.