ரஜினி ரசிகையாக நடிக்கும் ஜோதிகா…

நடிகர் சூர்யாவின் மனைவியான ஜோதிகா, அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் ரஜினியின் ரசிகையாக நடிக்க இருக்கிறார்.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மோகன்லால்’. நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகையான ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களை குடும்பப் பின்னணியில் சொன்ன இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தது. படத்தில் மோகன்லாலின் ரசிகையாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அவரது நடிப்பும் பாராட்டுகளை பெற்றது.

இந்த படத்தை ஜோதிகாவை வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடுகிறார்கள். மோகன்லாலுக்கு பதிலாக ரஜினிகாந்த் ரசிகையாக ஜோதிகாவை மாற்றவிருக்கிறார்கள். இதற்காக ‘ரஜினி செல்வி’ என்ற தலைப்பும் பரிசீலனையில் இருக்கிறது.

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ‘ஹெள ஓல்ட் ஆர் யூ?’ படத்தின் ரீமேக்கான ‘36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தான் ரீ என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.

இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான ‘தும்ஹாரி சுலு’ என்ற படத்தின் ரீமேக்கில் ஜுன் மாதம் முதல் நடிக்கவிருக்கிறார். அந்த படம் முடிந்த பிறகு ‘ரஜினி செல்வி’ படம் துவங்கலாம். ஜோதிகா இப்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துவருகிறார்.