ரஞ்சனது கருத்தினை எதிர்க்கிறேன், எழுத்துமூல கருத்து தேவை – பிரதமர்

(FASTNEWS | COLOMBO) – நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மகா சங்கத்தினருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தினை தான் எதிர்ப்பதாகவும் அது தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் எழுத்துமூல கருத்துக்களை முன்வைக்குமாறும் தெரிவித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(15) கடிதம் ஒன்றினை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க ராமநாயக்க தெரிவித்திருந்த கருத்தானது கட்சித் தலைமையினதோ கட்சியினதோ கருத்துக்கு எதிரானது எனவும், குறித்த கருத்துக்களை பிரதமர் என்ற ரீதியிலும் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியிலும் வன்மையாக கண்டிப்பதாகவும் பிரதமரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.