ரஞ்சனின் இரகசிய அறிக்கைகள் UNP ஆதரவுடன் எதிர்க்கட்சியின் கைகளில்.. – சவுக்கை அருந்திகவிடம்..

(FASTGOSSIP | COLOMBO) – இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட இரகசிய விடயங்கள் தொடர்பிலான அறிக்கைகள் உள்ளடங்கிய கட்டுக்கள் எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது கைக்கு சிக்கியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு உதவியாக ஆக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் பாராளுமன்ற உரையின் போது பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ இது தொடர்பில் மறைமுகமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.