(FASTGOSSIP | COLOMBO) – அண்மையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கொக்கேன் பாவிக்கும் அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் யாரந்த கொக்கேன் பாவிக்கும் அமைச்சர்கள் என ஆர்வமாக உள்ள நிலையில் இதுவரையில் அவர்கள் யாரென வெளிவராதிருப்பது மக்கள் மத்தியில் கேலிக்குரிய விடயமாக இருந்தாலும் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது கருத்தில் உறுதியாக இருக்கிறார்.
இது தொடர்பில் கொக்கேன் குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நியமித்திருந்த நிலையில் குறித்த குழுவின் அறிக்கை நேற்று(25) பிரதமருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்க சபை முதல்வர் உறுதியாக கூறுகிறார், தான் 30 வருட பாராளுமன்ற சேவையில் அவ்வாறு கொக்கேன் போதைப்பொருள் பாவிக்கும் நபர்கள் இல்லை என்றும் இவை பொய்யான பிரச்சாரம் என்றும் கூறுகிறார்.
அது அவ்வாறு இருக்க ரஞ்சன் ராமநாயக்கவினால் சிலரது பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் தெற்கு அமைச்சர் ஒருவர் சம்பந்தம் என்றும், தமிழ் அமைச்சர் ஒருவரும் உள்ளாரென்றும் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் உள்ளார் என தெரிவித்திருந்த நிலையில், ஜேவிபி கட்சியில் உள்ள 06 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொக்கேன் இற்கும் தொடர்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களும் இதனுடன் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.