(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும், அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் உதவும் அரசியல்வாதியாகவும், கலைஞராகவும் புகழ் பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் சுதந்திரக் குடிமகனாக சமூகத்திற்கு வந்து சமூக நீதிக்காக ஆற்றலுடன் செயற்பட வேண்டும் என்பதே தமது ஒரே நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதே நேரம் ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை செய்ய இருப்பதாக அரசாங்க அமைச்சர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.