பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பெரும்பாலான சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோர் ஊழல் பேர்வழிகள் என பிரதியமைச்சர் ரஞ்சன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அவரது கூற்றை வன்மையாகக் கண்டித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம் அவ்வாறான ஒருவரையேனும் சுட்டிக்காட்டுமாறு பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சவால் விட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் அவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க வழக்குப் பதிவு செய்யாது போனால் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை தொடுக்கப் போவதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
(rizmira)