லங்காபுத்தர அபிவிருத்தி வங்கியில் மாகாண அமைச்சர் டி.வீ உபுல் பெருந்தொகை பணத்தை கடனாகப் பெற்றுக்கொண்டு செலுத்தவில்லை என ரஞ்சன் ராமநாயக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும் இதனால் தமது நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து 500 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு கோரி ரஞ்சனுக்கு எதிராக உபுல் நேற்றையதினம் (19) வழக்குத் தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.