ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த பிணை கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

—————————————————————————- [UPDATE 1.50 p.m]

ரஞ்சன் நீதிமன்றில் ஆஜர் 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமைய ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.