ரஞ்சன் மீதான வழக்கு மீண்டும் ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு…

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எதிர்வரும் ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று(04) மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.