ரணிலின் உத்தரவுக்கு அமைய ஐதேக’யின் விசேட பொறுப்புகளுக்கான அமைச்சர்கள் இருவர் நியமிப்பு… ! ! !

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரை இம்முறை அமைச்சரவை திருத்தத்தில், விசேட பொறுப்புகளுக்கான அமைச்சர்களாக நியமிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இரு சிரேஷ்ட அமைச்சர்களும் தற்போது வகிக்கும் அமைச்சுப் பொறுப்புகளை ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அமைச்சர்கள் இருவருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள அமைச்சரவை திருத்தத்தின் போது, குறித்த புதிய மாற்றங்கள் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

#g..