ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும் தாங்கள் இணைந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஊழல் மற்றும் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களை ஆட்சேர்ப்பு செய்த கைப்பாவை அரசாங்கத்துடன் தேசிய மக்கள் சக்தி தன்னை ஈடுபடுத்தாது” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் திங்கட்கிழமை (16) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசாங்கம் அமைக்கப்பட்ட போதிலும் ஆளும் தரப்பு இன்னும் அமைச்சரவை அமைச்சர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுக்களை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் இதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். இந்த பொம்மை அரசுக்கு மக்கள் ஆணை இல்லை. நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
யுத்த காலத்தில் ஊடகவியலாளர் கீத் நொயா தாக்கப்பட்டமை தொடர்பில், முன்னாள் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பு கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாய்நாட்டுக்கான இராணுவ…
(FASTNEWS|COLOMBO) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையிலான 05 பேர் கொண்ட குழுவினர் இன்று(18)…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)– கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தொழில்நுட்ப கல்வி…