ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரம் வழங்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவு செய்து, ஈழ அரசாங்கம் அல்லது சமஸ்டி அரசாங்கத்தை உருவாக்குவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இன்னும், ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரம் கிடைத்தால் வடக்கு கிழக்கிற்கு வீசா பெற்றுக்கொண்டு தான் செல்ல வேண்டும்.
மடு தேவாலயத்திற்கு செல்வதற்கு காணப்பட்ட அச்சத்தை, யுகத்தை நிறைவு செய்து நாங்கள் நாட்டை ஒன்றாக இணைத்தோம்.
மேலும் இரண்டு வருடங்கள் எங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கு கிடைத்திருந்தால் மக்களுக்கு பணம் கிடைக்கும் முறையினை நாங்கள் ஏற்படுத்தியிருப்போம்.
எனினும் இன்று நாட்டில் நாங்கள் ஆரம்பித்த அபிவிருத்திகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது, பலர் தொழில் வாய்ப்புகளை இழக்கப்பட்டு வறுமையில் அலைகின்றனர்.
என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
(riz)