ரணிலுக்கு பச்சை கொடி காட்டுகிறதாம் அமெரிக்கா…

அமெரிக்க உள்ளிட்ட மேற்குல நாடுகள் முன்னாள் பிரதமர் ரணிலுக்கு ஆதரவாக முழுவீச்சில் களமிறங்கியுள்ளதாக அரசியல் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 27ம் திகதி ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இலங்கை தூதர்கள் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிருந்தனர்.

ஜனாதிபதியினால் பிரதமரை பதவி நீக்கம் செய்த பின்னர் அமெரிக்காவை தொடர்ப்பு கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மேல் மட்டம் இந்த விடயத்தில் உதவுமாறு அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

மேலும், பாராளுமன்றத்தை கூட்டி ஜனநாயகத்தை நிரூபிக்குமாறு அமெரிக்க கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..