பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு குழி பறித்து அவரது பிரதமர் பதவியினை ஏற்க ஒருபோதும் நான் சம்மதிக்க மாட்டேன் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
“.. தான் தனது வாழ்வில் ஒருபோதும் தன்னுடைய கட்சியின் தலைவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டேன், எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அது கட்சியினுள் சுமுகமாக தீர்மானிக்கப்படும்..” என தெரிவித்திருந்தார்.
பிணை முறி குறித்த வாக்குமூலம் அளிக்க முன்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி பிரதமருக்கு கோரிக்கை ஒன்றினை முன்வைத்தது தொடர்பில் வினவிய போதே அமைச்சர் இது குறித்து தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும், அவ்வாறு பதவி விலகும் இடத்து பிரதமர் பதவிக்கு கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர ஆகியோரது பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தியள் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை எனவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
#rizmira..