ரணிலுக்கு போட்டியாக களத்தில் மைத்திரியாம்

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்கைக்கு இணங்கி ஆட்சி செய்­வ­தற்­காக தேசிய அர­சாங்கத்தில் இணை­ய­வில்லை. மாறாக இரு­கட்சி ஒரு­மைப்­பாட்டின் மூலம் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண்­ப­தற்­கா­கவே இணக்­க­ப்பாட்டு அர­சியலி­ல் ஈடு­பாடு காட்­டு­கின்றோம் என சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்சாளரும்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பங்­காளி கட்­சிகள் அனைத்துக்கும்  இன­வாத கொள்­கை­களை கடைப்­பி­டிக்க அதி­காரம் உள்­ளது. ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யினுல் உள்ள எவரும் இன­வாத போக்கில் பய­ணிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தெ­னவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னால் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவும் ,மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது அவர்கள் போட்டியிட்டாலும் சட்ட மீற­லாகும். எனவே அடுத்த தேர்­த­லிலும் தற்போதைய  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்கும் நோக்­கி­லேயே சுதந்­திர கட்சி பய­ணிக்­கின்­றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்­பெற்ற ஊட­க­வி­யலார் சந்­திப்பில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்;

நாட்டில் ஒரு பிரச்சினை தேசிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுக்கும் போது அதற்கு அதிக தட­வைகள் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியே தீர்வு கண்­டுள்­ளது. தற்­போது எமது நாட்டில் நல்­லி­ணக்கம் இல்­லா­மையே தேசிய பிரச்சினையாக உரு­வெ­டுத்­துள்­ளது. அதற்கு தீர்வு காண்­ப­தற்கு சுதந்­திர கட்சி என்ற வகையில் பல்­வேறு முயற்­சி­களை நாம் முன்­னெ­டுத்து வருகின்றோம்.

அதற்­க­மைய உலக நாடுகள் மத்­தி­யிலும் சக­லரும் ஏற்­றுக்­கொள்ள கூடிய வகையில் அர­சி­ய­ல­மைப்பை பின்­பற்றி நடக்கும் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­ கொண்­டுள்ளார். அதனால் அவ­ருக்கு ஜீ.7 மாநாட்டில் பங்­கேற்கும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர் இந்­தி­ய­விற்­கான விஜயம் மேற்­கொண்­டி­ருந்த போது இரா­ஜ­தந்­திர முறையில் இந்­தி­யா­வு­ட­னான சில சிக்­கல்­களை களைந்தார் இந்நிலையில்  சர்­வ­தேச தர­வ­ரி­சையில் இடம்­பெறும் நாடுகள் பலவற்றுடன் எமக்கு உள்ள சிக்­கல்­களை இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுகி தீர்வை பெற்­றுக்­கொள்வார் என்ற எதிர்­பார்ப்பு எமக்கு உள்­ளது.

இலங்­கையின் மீது தற்­போது பல்­வேறு நாடு­களும் முழு­மை­யான நம்பிக்கை கொண்­டுள்­ளன. எனவே இவ்­வா­றான நாட்டின் ஒற்­று­மைக்கு பால­மா­க­வுள்ள தலை­வரின் கீழ் சுதந்­திர கட்­சியை சேர்ந்த அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். அதனால் எமது கட்சி எந்த ஒரு தனி நபரின் பின்­னாலும் செல்­லாது என்­பதில் மாற்­றுக்­கொள்கை இல்லை.

இந்­நி­லையில் தற்­போது நாம் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து இணக்­கப்­பாட்டு அர­சியல் செய்து வரு­கின்றோம். அதற்­காக ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் சுதந்­திர கட்­சி­யி­னதும் கொள்­கைகள் ஒன்­றென ஆகி­வி­டாது. எனவே தற்­போது எமது நாட்டில் நல்­லி­ணக்கம் இல்­லாமை தேசிய பிரச்­சி­னை­க­ளாக உரு­வெ­டுத்­துள்­ளது. அதற்கு நிரந்­தர தீர்வொன்றை பெற்­றுக்­கொள்­ளவே ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணக்கப்பாட்டு அர­சியல் செய்­கின்றோம்.

ஐக்­கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி செய்தால் நாட்டில் குழப்ப நிலைகள் ஏற்­ப­டலாம் அந்த நிலை ஏற்­ப­டாமல் இருக்கும் வண்ணம் பாதுகாப்பதற்கும் நாம் இவ்­வாறு இணக்­கப்­பாட்டு அர­சியல் செய்கின்றோம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று அதி­கா­ரத்தை குறைத்துக் கொண்டுள்ளார். எதிர்­கா­லத்தில் மேலும் சில அதிகாரங்களை குறைக்­க­வுள்ளோம். 19 ஆது திருத்­தத்தின் மூலம் இந்த அதி­கார குறைப்புச் செய்­யப்­பட்­டது. அத்­துடன் 5 வருட பத­வி­கா­லத்­துடன் இரு முறை ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கலாம் என்றும் சட்டம் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா குமாரதுங்க, மஹிந்த ராஜ­பக்ச ஆகி­யோ­ருக்கு மீண்டும் ஒரு­முறை ஜனாதிபதியாக முடி­யாது.

அடுத்த ஜனா­தி­பதி தேர்­ததில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்பாளராக கள­மி­றங்­க­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ரமசிங்­கவை எதிர்த்து போட்­டி­யிடும் வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன மாத்­தி­ரமே உள்ளார். சுதந்­திர கட்­சியில் இரண்டாம் நிலை தலை­மைத்தும் ஒன்று உரு­வாக்­கப்­ப­டா­மை­யி­னா­லேயே இந்நிலை தோன்­றி­யுள்­ளது.

கடந்த ஆட்­சியில் கட்­சியின் முதலாம்,இரண்டாம் , மூன்றாம் நிலை­களில் ராஜ­பக்­சக்­களே இருந்­தனர். அதனால் சரி­யான தலை­மைத்­துங்கள் உருவாகவில்லை. எனவே எதிர்­கா­லத்தில் 2 ஆம் நிலை தலைமைத்துவங்களை உரு­வாக்­கு­வ­திலும் அவ­தானம் செலுத்தவுள்ளோம்.எனவும் தெரிவித்துள்ளாராம்.