ரணிலுக்கே மொட்டு கட்சி ஆதரவு! தீர்மானத்தில் மாற்றமில்லை: சாகர எம்.பி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில்
ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற கட்சியின்  தீர்மானத்தில் எந்த மாற்றம் இல்லை என
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் ஊடகங்களிடம் இன்று(17) இதனை தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.