ரணில் – மைத்ரி தேசிய அரசாங்கத்திற்கு சோபித தேரர் எச்சரிக்கை

தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே அமைச்சர்களை நியமிக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து சிங்கள ஊடகமொன்றில் தகவல் வெளியிடுகையில்;

தேசிய அரசாங்கம் அமைப்பதென்றால் நியமிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை 40 எனவும், அரசியல் அமைப்பிற்கமைய 30 அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்க முடியும்.

இந்த வரம்பை தாண்டி அமைச்சர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் நாட்டை பின் நோக்கி கொண்டு செல்வதோடு, அதுவொரு குற்றம் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை மீறினால் தான் அதற்கு மிகுந்த அதிருப்தியை வெளியிடுவதாகவும், வாக்குறுதிகளை மீறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றால் அது தரம் குறைந்ததொரு செயலாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(riz)