ரத்கம மாணவன் சடலமாய் மீட்பு

ரத்கம பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயதான பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி மாணவனின் சடலமானது ஜின் கங்கை கரையோரமாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததுடன் அவரது பாடசாலை பை மற்றும் செருப்பு ஜின் கங்கை அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.