(FASTGOSSIP | COLOMBO) – ரத்கம, பூஸ்ஸ வர்த்தகர்கள் இருவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையினை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை அறியப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த இரு இளம் வர்த்தகர்களதும் குடும்பத்தினர் நேற்று(25)எதிர்கட்சித் தலைவரை சந்தித்திருந்தனர்.
குறித்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தி தண்டனை வழங்கி குடும்பங்களுக்கு நீதி வழங்குமாறும் குடும்பத்தினர் எதிர்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








