ரத்கம வர்த்தகர்களது சடலத்தினை எடுத்துச் சென்ற கெப் வாகனம் கைது…

(FASTNEWS | COLOMBO) – காலி – ரத்கம பிரதேசத்தில் இரண்டு வர்த்தகர்கள் கடத்தி, கொலை செய்து, அவர்களது சடலத்தை கொண்டுச் செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் வாகனத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளார்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வான் ஒன்றில் கடத்தப்பட்ட குறித்த இரு வர்த்தகர்களும் கொலை செய்யப்பட்ட பின்னர், குறித்த கைப்பற்றப்பட்டுள்ள கெப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், குறித்த கெப் வாகனத்தின் உரிமையாளர் அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகரால் வர்த்தகரிடமிருந்து கெப் வண்டி பெறப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.