ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு – இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்திய துப்பாக்கி தொடர்பில் CID அறிவிப்பு..

சுத்தமான குடிநீர் கோரி கம்பஹா – ரத்துபஸ்வலயில் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது மேற்கொள்ளப்பட் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட T56 ரக துப்பாக்கிகள் நாற்பதும் பாவிக்கப்படவில்லை என இரசாயன பகுப்பாய்வாளர் அறிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று(20) நீதிமன்றில் அறிவித்தது.

குறித்த இந்த வழக்கு கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போதைய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு இராணுவ வீரர்களையும் எதிர்வரும் மாதம் 04ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மேலதிக திநீதிவான் இதன் போது உத்தரவிட்டுள்ளார்.

சுத்தமான குடிநீர் கோரி ரத்துபஸ்வல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)