கைது செய்யப்பட்ட பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தனவை இம்மாதம் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ. ருவன்பத்திரன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
—————- Update -10.00 PM
வெலிவேரிய – ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவு வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தன இன்று(25) கைது செய்யப்பட்டார்.
வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் இன்று வருகை தந்திருந்த போது குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்திருந்தார்.
குடிநீரில் விஷத் திரவியங்கள் கலப்பதாக கூறி கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூவர் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கது.