கம்பஹா – ரத்துபஸ்வெவ மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதாகியுள்ள பிரிகேடியர் அனுர தேஷப்பிரிய குணவர்தன உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய இராணுவ வீரர்கள் நான்கு பேர் உள்ளிட்டோரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டுள்ளது.
2013 ஆகஸ்ட் 01ம் திகதி வெலிவேரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அகில தினேஷ் மற்றும் ரமில ரவிஷான் ஆகிய இரு மாணவர்களும் நிலந்த புஷ்பகுமார எனப்படும் இளைஞரும் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
(rizmira)