ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை குறித்த தீர்மானம் வெள்ளியன்று…

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பது குறித்து கலந்துரையாட ஹெல உறுமயவின் மத்தியக் குழு, எதிர்வரும் வெள்ளியன்று(17) கூடவுள்ளது.

அன்றைய தினத்தில் ரத்ன தேரரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பிலும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.