பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(13) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நாரஹென்பிட்டி பகுதியில் கடந்த 09ம் திகதி இடம்பெற்ற விபத்தின் பின்னர், இரண்டு இளைஞர்களுக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
rishma