ரம்ஜான் மாதத்தில் நோன்பு பிடிக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொன்ற ஐ.எஸ்.

ஐ.எஸ். அமைப்பின் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் கொடூர நடைமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது நோன்பு இருக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது.

சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்-மையடின் நகரத்தில் கடந்த திங்கள் கிழமை அன்று கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் 5 உடல் கிடந்தது. அவர்களின் கழுத்தில் கட்டபட்டிருந்த துண்டு சீட்டில் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்காததால் நாள் முழுவதும் சித்ரவதை செய்து பின்னர் 70 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 3,027 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.