ரம்புக்வெல்லவின் புதல்வர் ரமித் திருமணபந்தத்தில்…

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வரான கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை பெண்ணான நட்டாலி செனல் என்ற பெண்ணையே ரமித் இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மணமகளின் தாய் அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் உதவி இராஜாங்க செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடந்த திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசியல்வாதிகள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)