ரயன் ஜயலத்தின் பிணை கோரிய மனு விசாரணை அடுத்த வாரம்..

மருத்துவ பீட நடவடிக்கை குழுவின் இணைப்பாளரான ரயன் ஜயலத்தின் பிணை கோரிய மனு எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று(02) அறிவித்துள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சார்பில் பிணை கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றில் அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்குறித்த இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

 

(rizmira)