ரயி­லி­ல் ஆண் ஒரு­வரின் சடலம்

கண்­டி­யி­லி­ருந்து பதுளை செல்லும் ரயி­லி­ல் ஆண் ஒரு­வரின் சடலம் நேற்று மீட்­கப்­பட்­ட­தாக நானு­ஒயா பொலிஸார் தெரிவிக்­கின்­றனர்.

இந்­திக உசாந்த ஜய­ரத்ன (47) என்­ப­வரின் சட­லமே மீட்­கப்­பட்­டுள்­ளது.

இவ­ரி­ட­மி­ருந்­த­பாக்­கட்டில் வங்கி சேமிப்பு புத்­த­கத்தில் இருந்தே இந்த தக­வல்கள் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக நானு­ஒயா பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இவர் கண்டி ரயில் நிலை­யத்தில் கம்­பளை நோக்கி செல்­வ­தற்­காக பய­ணச்­சீட்டை பெற்றுக் கொண்­டுள்ளார்.

இவ­ரது சடலம் நுவ­ரெ­லியா ஆதார வைத்­தி­ய­சா­லையில் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.