பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை(20) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் புதிய பயிலுனர் சாரதிகளை சேவையில் உள்ளீர்த்துக் கொண்ட செயற்பாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி குறித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை நள்ளிரவு முதல் ரயில்வே சாரதிகள், பாதுகாவலர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த வாரம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்காததையடுத்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக இந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் குறித்த தொழிற்சங்கம் மேற்கொண்ட போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.