(FASTNEWS|COLOMBO) – ரயில்வே ஊழியர்கள் நேற்று(03) நள்ளிரவு முதல் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குடிபோதையில் இருந்த சேவையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காததன் காரணத்தால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று(04) காலை முதல் எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடவில்லை என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.