(FASTNEWS | COLOMBO) – ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் திடீரென மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு தற்போது ஓரளவு வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று(08) நள்ளிரவு முதல் அவர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பல ரயில் சேவைகள் இன்று(09) இரத்துச் செய்யப்பட்டிருந்தன.
பொதி விநியோகத்தின் போது கட்டுப்பாட்டாளர்களுக்கும், ரயில் நிலைய அதிபர்களுக்கு இடையில் நிலவும் முரண்பாட்டு நிலைமை தொடர்பிலேயே அவர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.