புகையிரத வேலை நிறுத்தத்தை அடுத்து இலங்கை போக்குவரத்து சபை, பயணிகளுக்கான பேருந்து சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
அதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது 500 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவை தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பாக 0117 505 555 என்ற தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.