(FASTNEWS|COLOMBO) -போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோவிற்கு பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, இன்று(04) முற்பகல் அமைச்சருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக டிலந்த பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
குடிபோதையில் இருந்த சேவையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ரயில்வே ஊழியர்கள் நேற்று(03) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.