ரயில் கடவைகள் தொடர்பில் கவனயீனமாகும் சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம்..

ரயில் கடவைகளுக்கு குறுக்காக பயணிக்கும் போதும், ரயில் கடவைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரயில் கடவைகள் தொடர்பாக கவனம் செலுத்தாதவர்களுக்கு எதிராக 25,000 ரூபா தண்டம் விதிப்பதற்கான சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தி அமுல்படுத்தவுள்ளதாக சிவில் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)